0
அனுபவத்தில் இருந்து மனிதன் படிக்கும் பாடம் வாழ்க்கையின்
எல்லா நேரங்களிலும் நமக்கு பயன்படும் சில நேரங்களில் பலரின்
அனுபவம் கூட நம் வாழ்க்கைக்கு உதவும் அந்த வகையில்
வாழ்க்கைக்கு உதவும் 7500 பயனுள்ள உதவிகளைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

அனுபவம் ஒரு மிகச்சிறந்த ஆசான் என்று சொல்லும் புத்திசாலிகள்,
தன்னை விட சிறியவர்களிடம் இருந்து வாழ்க்கையை கற்றுகொள்ளும்
பெரிய மனிதர்களும் “ அனுபவம் “ என்ற துறைக்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இந்த அனுபவத்தை நாம்
சேகரிக்க எங்கும் தேடி அலையவேண்டியதில்லை, ஒரே இடத்தில்
நம் வாழ்க்கைக்கு உதவும் 7500 -க்கும் மேற்பட்ட பயனுள்ள
உதவிகளை கொண்டு ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.daytipper.com
ஒவ்வொன்றும் பலதரப்பட்ட மக்களால் பயன்படுத்தப்பட்டு அதன்
பின் அதைப்பற்றி மக்கள் தாங்கள் கொடுக்கும் பின்னோட்ட
அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
பெரும்பான்மையான மக்கள் வாழ்க்கையில் அடுத்தவரிடம்
ஆலோசனை கேட்பதை எப்பொழும் வாடிக்கையாக
கொண்டிருக்கின்றனர். அப்படிபட்ட மக்கள் இங்கு கொடுத்திருக்கும்
அனைத்து அனுபவங்களையும் மறக்காமல் எழுதி வைத்து
தேவையான நேரங்களில் பயன்படுத்தி பயன் அடையலாம்.

Post a Comment

 
Top