0
ரேபிட்ஷேர் ,மெகாஅப்லோட்,ஹாட்பைல், டெபாசிட்ஃபைல்ஸ்
போன்ற தளங்களில் பிரியம் அக்கவுண்ட் இருந்தால் தான்
வேகமாகவும் காலதாமதம் இன்றியும் தரவிரக்க முடியும் என்ற
நிலையை மாற்றி பிரிமியம் அக்கவுண்ட் இல்லாமல் எப்படி
வேகமாக தரவிரக்கலாம் என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
கோப்புகளை இலவசமாக பகிர்ந்து கொள்வதில் முன்னனியில்
இருக்கும் அனைத்து தளங்களிலும் நாம் பிரிமியம் பயனாளர்
கணக்கு வைத்திருந்தால் தான் வேகமாகவும் தொடர்ச்சியாகவும்
தரவிரக்கலாம் என்று இல்லாமல் பிரியம் அக்கவுண்ட்
இல்லாமலும் நாம் இது போன்ற தளங்ககளில் இருந்து
தரவிரக்கத்திற்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.
இந்தச்சுட்டியை சொடுக்கி மென்பொருளை தரவிரக்கி நம்
கணினியில் நிறுவிக்கொள்ளவும்.
இந்த மென்பொருள் ஒரு உலாவி போலவே செயல்படுகிறது
இங்கு சென்று நாம் எந்த இணையதளத்தின் கோப்பை தரவிரக்க
வேண்டுமோ அந்த இணையதளத்தின் யூஆரெல்(URL )முகவரியை
கொடுக்க வேண்டியது தான் உடனடியாக தரவிரக்கம்
தொடங்கிவிடும். எந்த பிரிமியம் கணக்கும் தேவையில்லை,
வேகமாகவும் காலதாமதம் இன்றியும் தரவிரக்கம் தொடங்கி
விடும். கண்டிப்பாக இந்த மென்பொருள் அதிகமாக ரேபிட்ஷெர்
போன்ற தளங்களில் இருந்து தரவிரக்கம் செய்பவர்களுக்கு
பயனுள்ளதாக இருக்கும்.

Post a Comment

 
Top