0
தினமும் ஒரு நவீன வித்தியாசமான ஆங்கில வார்த்தையை
எளிதாக கற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

இதுவரை நாம் ஆங்கிலத்தில் அதிகமாகப் பயன்படுத்தாத நவீன
வார்த்தைகளை நமக்கு தேர்ந்தெடுத்து தினமும் ஒரு வார்த்தையை
நமக்கு கொடுக்கின்றனர். இந்த ஆங்கில வார்த்தைக்கு டிவிட்டர்
மூலம் யார் வேண்டுமானாலும் நமக்கு தெரிந்த பொருளை கூறலாம்.
அடுத்த நாள் இதற்கான நவீன சிறந்த விளக்கத்தையும் சரியான
அர்த்தம் கொடுத்தவர்களின் பெயரையும் இவர்கள் தளத்தில்
காட்டுகின்றனர்.
இணையதள முகவரி : http://www.artwiculate.com
டிவிட்டர் முகவரி : http://twitter.com/artwiculate
நம் ஆங்கில அறிவின் திறமையை வளர்ப்பதாகவும் தினமும்
சில நிமிடங்கள் செலவு செய்து தினமும் ஒரு நவீன ஆங்கில
வார்த்தையை எளிதாக கற்றுகொள்ளலாம். டிவிட்டர் மூலம்
அன்றைய தினம் கொடுக்கும் வார்த்தைக்கு நமக்கு தெரிந்த
அர்த்தத்தையும் கொடுத்து நாமும் போட்டியில் பங்கு பெறலாம்.
உங்கள் பதில் சரியாக இருந்தால் உங்கள் பெயர் அடுத்த நாள்
இந்த தளத்தில் வரும். ஆங்கில வார்த்தைகள் அதிகம்
கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆசை உள்ள அனைவருக்கும்
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

Post a Comment

 
Top