0
Google Calendar என்பது இணையதள பயனர்கள் பலரும் அறிந்த ஒன்றுதான். இருந்தும் இது தெரியாதவர்களுக்கு.எப்படி ஒரு Event உருவாக்குவது, நம் போனுக்கு SMS அனுப்ப  Google calendar எப்படி பயன்படுத்துவது என இதில் பார்ப்போம்.


முதலில் Google Calender பற்றி சிறு குறிப்பு:

Google calendar ஆண்டு 2006 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. பலவிதமான remainder பயன்பாடுகளுக்கு இது வாசகர்களால் பயன்படுத்தப்படுகிறது. SMS, இமெயில் என இரண்டிலும் உங்கள் முக்கியமான வேலைகளை நினைவு படுத்த இதை பயன்படுத்த முடியும்

Google Calender Link: http://calendar.google.com/

இதில் நீங்கள் உங்கள் ஜிமெய்ல் கணக்கை பயன்படுத்தியே நுழைந்து கொள்ளலாம். அல்லது ஒரு Google account இருந்தாலே போதும்.

நீங்கள் புதியவராக இருந்தால்  Welcome to Google Calendar என்ற பக்கத்தை முதலில் நிரப்பவும். இதில் நீங்கள் தற்போது இருக்கும் நாட்டினை குறிப்பிடவும். இப்போது calendar பகுதிக்கு நீங்கள் வந்து விடுவீர்கள். இதன் வலது மேல் மூலையில் calendar view தெரிவு செய்து கொள்ளவும்(Day,week,month,..  ). 



இதில் சிவப்பு  நிறத்தில் வட்டமிடப்பட்டுள்ள settings பகுதிக்கு செல்லவும். இதில்தான் உங்களுக்கு தேவையான செட்டிங்க்களை நீங்கள் உருவாக வேண்டும்.

இப்போது வரும் புதிய பகுதியில் "General" என்பதை தெரிவு செய்யவும். இதில் உங்களுக்கு ஏற்ற செட்டிங்களை மாற்றவும். முக்கியமாக நாடு, time zone போன்றவை. இதை இப்போது save  செய்து விடவும்.

இப்போது இதே settings வழியாக "calendar" என்ற பகுதிக்கு வரவும். இதில் default ஆக உள்ளவற்றை மாற்ற விரும்பினால் மாற்றிக் கொள்ளவும். NOTIFICATIONS நேரம், காலம்  கூட மாற்றிக் கொள்ளலாம்.

Share வசதி மூலம் உங்கள்  calendar வேறு இமெயில் உடன் share செய்து கொள்ளலாம். அலுவலக பணிகளுக்கு இது உதவியாக இருக்கும்.

மேலும் இந்த பகுதியில் உள்ள  Browse interesting calendars » என்பதன் மூலம் உங்களுக்கு தேவையான Holidays , Cricket match, என மேலும் பலவற்றை subscribe செய்து கொள்ளலாம். இதில் உங்களுக்கு விருப்பமானதை Subscribe செய்யும் போது அது உங்கள் Calendar இல் Add ஆகிவிடும்.

இப்போது அடுத்த பகுதியான "Mobile Setup" க்கு வரவும். இதில் உங்கள் நாடு, மொபைல் எண் கொடுத்து  Verification code வாயிலாக உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ளவும்.

"Labs" என்ற பகுதியில் உங்களுக்கு விருப்பமானதை Enable செய்து கொள்ளவும்.

இவற்றை save செய்த பின் main calendar பகுதிக்கு வரவும். இதில் ஏதாவது ஒரு தேதி மீது கிளிக் செய்தாலே Event/Task தோன்றுவதை காணலாம்.



Event பெயர் கொடுத்தவுடன் Create Event என்பதை கொடுத்து விடவும். பின்னர் Save ஆன Event பெயரை கிளிக் செய்து Edit Event Details கொடுக்கவும். இப்போது வரும் பகுதியில் event Details குறிப்பிடவும். இதில் Repeat என்பதை தெரிவு செய்து  உங்களுக்கு ஏற்றார் போல இதே event மீண்டும் Repeat  செய்து கொள்ளலாம்

உதாரணத்திற்கு நண்பரின்  பிறந்த நாள் ஆக இருந்தால் வருடத்துக்கு ஒரு முறை. இதே போல மாதம், வாரம் நிகழ்ச்சிகளுக்கு என, எதை வேண்டுமானாலும் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

இப்போது கீழே Find Time என்ற இடத்தில் ஏதேனும் ஒரு நேர இடைவெளியை தெரிவு செய்யவும். (like 1 to 3 , 1.30 to 2.30 ). இது தேதி குறிப்பிட்டுள்ள இடத்தில் add ஆகிவிடும். இப்போது Save கொடுக்க வேண்டாம். மாறாக Event Details வரவும்.

இதில் Remainder என்ற இடத்தில் Remainder எதன் வழியாக பெற வேண்டும் என்பதை கொடுக்கவும். Email,Pop up,SMS இதில் ஏதேனும் ஒன்றை கொடுக்கவும். எந்த நேரம் என்பதை கூட இதில் கொடுக்கலாம்.குறிப்பிட்ட நேரத்தில் உங்களுக்கு SMS, or Mail (நீங்கள் தெரிவு செய்தது) வந்து சேரும்
இப்போது Save செய்து விடவும்.

மாற்றி ஏதாவது கொடுத்து விட்டால் event மீது வைத்து ஒரு கிளிக் செய்து அந்த Event Delete செய்து விடலாம்.


அவ்வளவுதான் நண்பர்களே.உங்களுக்கு சந்தேகங்கள் இருப்பின் கேட்கவும்.

Post a Comment

 
Top