0
ஒவ்வொரு இணையதளமும் அவர்களுக்கென் ஒரு லோகோவை உருவாக்கி வைத்து கொள்கின்றனர். பதிவர்கள் நாம் இது சம்பந்தமாக பதிவு போடும் போதோ அல்லது விட்ஜெட்டில் இணைக்கவோ அந்த ஐகான்களை உபயோகப் படுத்த்துகிரார்கள். மற்றும் பல்வேறு செயல்களுக்கு இந்த ஐகான்கள் தேவைப்படுகிறது. இது போன்று ஐகான் தேடுவோருக்கு பயனுள்ள வகையில் உள்ள ஒரு தளத்தை பற்றி இங்கு காண்போம். இந்த தளம் தேடியந்திரம் போலவே செயல்பட்டாலும் மேலும் பல வசதிகள் இதில் உள்ளது. உபயோகிப்பதற்கும் மிகவும் சுலபமாக உள்ளது.


  • முதலில் இந்த லிங்கில் சென்று உறுப்பினர் Register ஆகி கொள்ளுங்கள். இது இலவச சேவை தான் உறுப்பினர் ஆக அதிகபட்சம் 2 நிமிடங்கள் போதும். 
  • உறுப்பினர் ஆகியவுடன் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள். 
  • இந்த தளத்தில் Search என்ற லிங்க்கை அழுத்தி உங்களுக்கு தேவையான ஐகானை தேடி கொள்ளும் வசதியும் உள்ளது. 
  • ஐகான் தேடும் பொழுது Size வாரியாகவும்,Background நிறம் வாரியாகாவும் தேடிக்கொள்ளலாம். 
  • இதில் உங்களுக்கு பிடித்த ஐகான் மீது கிளிக் செய்தால் இன்னொரு பக்கம் ஓபன் ஆகும் அதில் அந்த ஐகானின் டவுன்லோட் லிங்க் இருக்கும்.
  • ஒரு ஐகானை பல்வேறு பார்மட்களில் டவுன்லோட் செய்யும் வசதியும் அதில் காணப்படும். 
  • மேலும் இதிலுள்ள Free Icons லிங்கை கிளிக் செய்து சென்றால் ஐகான்களின் தொகுப்புகளை காணலாம். இதில் பலவேறு பிரிவுகளில் ஐகான்கள் காணப்படுகிறது. 

இதில் உங்கள் விருப்பம் போல டவுன்லோட் செய்து உபயோகப் படுத்தி கொள்ளலாம்.

இந்த தளத்திற்கு செல்ல - www.iconwanted.com

பதிவு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டைகளில் ஓட்டளித்து அனைவரையும் சென்றடைய உதவுங்கள்.

Post a Comment

 
Top