0
ஏதேதுக்கோ இணையதளங்கள் வந்து விட்ட நிலையில் இந்தயாவில் உள்ள ஊர்களின் பின்கோடுகளை அறிய ஒரு தேடியந்திரம் ஒன்று அறிமுகமாகி உள்ளது. பின்கோடுகள் என்பது மிகவும் அவசியமான ஒன்று ஏதோ கொரியர் அனுப்பவோ அல்லது லெட்டர் அனுப்ப நேரிட்டால் இந்த பின்கோட் என்பது மிகவும் கட்டாயமான ஒன்று சில நேரங்களில் இந்த பின்கோடுகள் தெரியாமல் நாம் சிரம பட்டிருப்போம்.  இந்த பிரச்சினைகளை தவிர்க்க ஒரு தேடியந்திரம் உள்ளது. இதில் நமக்கு தேவையான ஊர்களின் பெயரை டைப் செய்து என்டர் தட்டினால் போதும் உடனே  அந்த ஊரின் பின்கோட் வந்துவிடும்.
  • இந்த தளத்திற்கு சென்றவுடன் அங்கு இருக்கும் காலி கட்டத்தில் உங்களுக்கு தேவையான ஊரின் பெயரை பிழையின்றி ஆங்கிலத்தில் டைப் செய்து உங்கள் கீபோர்டில் உள்ள என்ட்டர் தட்டவும்.
  • என்ட்டர் அழுத்திய அடுத்த நொடியே உங்கள் ஊருக்கான பின்கோட் வந்துவிடும் இது போல உங்களுக்கு எத்தனை தடவை வேண்டுமானாலும் தேடி கொள்ளலாம்.
  • இதில் நாம் கொடுக்கும் ஊரின் வரைபடமும் சேர்ந்து வருவது இதன் கூடுதல் சிறப்பு.

  • மற்றும் இதில் பின்கோட் தவறாக இருந்தாலோ அல்லது ஏதாவது ஊருக்கு பின்கோட் இல்லாமல் இருந்தாலோ நாமே எடிட் செய்யும் வசதியை கொடுத்து உள்ளனர்.
  • அந்த பக்கத்தில் உள்ள எடிட் க்ளிக் செய்தால் வரும் விண்டோவில் நாம் மாற்றம் செய்யலாம். இதற்க்கு பயனாக நம்முடைய தளத்தின் லிங்கையும் கொடுத்து செவ் செய்து விட்டால் போதும்.
  • பதிவர்களுக்கு இது கூடுதல் பயனை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
இந்த தளத்திற்கு செல்ல- http://www.getpincode.info

Post a Comment

 
Top