0

புயலில் சிக்கி மரித்து விட்டது
நம் பிரிவு
தப்பிக்க வழி உண்டானால்
மீண்டு வா இல்லையெனில்
நிரந்தரமற்ற நம் பிரிவு நிஜமாகிவிடும்

நாம் இருவர் அல்ல ஒருவர் தான் மனதளவில்
அன்புக்கு இலக்கணம் கூறிய நம் காதல்
பிரிவினால் வாடியபோதும்
பரிவுடன் ஏங்குகிறது இன்னும்
உன் அன்புக்காக....

காலத்தின் வேகத்தால்
காணாமல் போன காதலை எண்ணி
காலன் அவன் மகிழ்வுற்றானோ
நானறியேன்...
இருப்பினும் நான்
தொலைவில் இருக்கும் உன்னைவிட
அருகில் இருக்கும்
தொலைபேசியை நேசிக்கிறேன் அதிகமாக
ஏனெனில் நீ கொடுத்த முத்தங்களை இதமாக
என் கன்னங்களில் என்றோ சேர்த்ததால்
இன்றும் நேசிக்கிறேன் இதமாகவே............

Post a Comment

 
Top