0
இந்த நிமிடத்திற்காக
வாழ்வதே நிதர்சனம்.
தெரியும் தான் எனக்கு...

நீ இல்லாத
இந்த நிமிடம்...
காற்று...
பூமி...
நுரையீரல்...
ரத்தம்...
மூளை...
வெளி...
பிரபஞ்சம்...
எல்லாமே சிதைந்து போயிருக்கிறது.

உனக்குப் புரிவதில்லை.
பிரிவென்பதோர் கொடுமை...
பிரிவில் நினைவென்பது
அதனிலும் கொடுமை.

உன்னைப் பற்றிய நினைவுகள்
உன்னைப் போன்றே
அழகானவை தான்.
ஆயினும்,
உன்னுடன் இருக்கும் நிமிடங்கள்
அழகின் உச்சம்.

நிஜங்கள் சாத்தியமாயிருக்கையில்
நினைவுகளோடு வாழ்வதெதற்கு...?

நீ வரும் நாள்
நாளையே வரும்.
அப்போது நிகழுபவற்றை
நினைவுகளாக தேக்கிக் கொள்ள
இப்போதே காத்திருக்கிறேன்.

நிஜங்கள் நிகழத் தாமதமாகையில்
நினைவுகள் தானே உயிர் காக்கும்...

நீ வந்த பின்,
சிதைந்தவை எல்லாம்
சிலிர்த்தெழுந்து மீளும்...
நிரம்பியிருக்கின்றன
நம்பிக்கைகள்...

Post a Comment

 
Top