0
இதயம் உன்பெயர் சொல்கிறதே
இதுதான் காதலா?
இளமை உன்பின் செல்கிறதே
இதுதான் காதலா?


கண்தூங்கினால் கனவுக்குள் நீயடி
இதுதான் காதலா?
கண்தேடினால் என்முன்னே நீயடி
இதுதான் காதலா?

ஆயிரம் கோடியில் பெண்ணினம் பார்க்கிறேன்
உன் முகம் தெரியுதடி இதுதான் காதலா?
கொலுசொலி கேட்கையில் உன் வரவு அறிகிறேன்
என் ஜீவன் நாடுதடி இதுதான் காதலா?

உன் கூந்தல் பூவொன்று மண்மீது சாய்ந்தாலே
என் கரம் தாங்குதடி இதுதான் காதலா?
நீ பதித்த தடத்தினிலே என் பாதம் வைத்தேனே
என் மேனி சுடுகுதடி இதுதான் காதலா?

'நீயின்றி நானில்லை நீதானே என் ஜீவன்
என் சுவாசம் சொல்கிறதே"
இரவும் தூங்கவே தலையணை சாய்ந்தேனே
நீ தூக்கத்தை பறித்தாயே இதுதான் காதலா?

நிலவுடன் பேசவே தனிமையில் நடந்தேனே
நீ நிழலிலே வந்தாயே இதுதான் காதலா?
தென்றலை காண்கையில் வார்த்தைகள் பேசவே
கவிதையாக மாறியதே இதுதான் காதலா?

நெஞ்சம் வாடினால் உன்நினைவுகள் சேரவே
மனசும் துளிர்த்ததே இதுதான் காதலா?
'வாழ்ந்தாலும் உன்னோடு பிரிந்தாலும் மண்ணோடு
என் ஜீவன் சொல்கிறதே"

Post a Comment

 
Top