0
ஆங்கில வார்த்தைகளை நாம் ஒழுங்குபடுத்த இணையதளத்துடன்
இணைந்தே ஒரு கருவி வந்துள்ளது இதைப்பற்றி தான் இந்த பதிவு.

ஆங்கில வார்த்தைகளை நமக்கு தகுந்த விதத்தில் மாற்றி அமைக்க
பல மென்பொருள்கள் வந்தாலும் மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற
மென்பொருள்கள் இல்லாத கணினியில் ஆன்லைன் மூலம் எளிதாக
நாம் நம் ஆங்கில வார்த்தைகளை ஒழுங்கு படுத்தலாம்.முதல்வார்த்தை
பெரிய எழுத்தாக இருக்க வேண்டும், வார்த்தைகளுக்கு இடையில்
எவ்வளவு இடைவெளி தேவை மற்றும் எல்லா எழுத்துக்களையும்
பெரியஎழுத்தாக மாற்ற வேண்டுமா அல்லது எல்லா எழுத்துக்களையும்
சிறிய எழுத்தாக மாற்ற வேண்டுமா,தட்டச்சு செய்து நாம் கட்டத்திற்க்குள்
கொடுத்திருக்கும் வார்த்தையில் குறிப்பிட்ட வார்த்தையை எங்கு
இருந்தாலும் அதை உடனடியாக நீக்கலாம். ஆங்கில எழுத்துக்கள்,
எண்கள்,  சிறப்பு எண்கள், இடைவெளி என அத்தனையுமே நாம் நீக்க
விரும்பினால் ஒரே சொடுக்கில் நீக்கலாம். இதையெல்லாம் விட நாம்
வேர்டில் என்ன செய்கிறோமோ அத்தனையுமே ஆன்லைன் மூலம்
செய்வதற்க்கு பல இணையதளங்கள் இருந்தாலும் மற்ற தளங்களை
போல் இணையபக்கம் லோட் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்
வதில்லை என்பது கூடுதல் சிறப்பு.
இணையதள முகவரி :  http://www.goformat.com

Post a Comment

 
Top