0
கல்லூரி மாணவர்கள் முதல் ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள்
வரை அனைவருக்கும் உடனடியாக உதவி செய்ய ஒரு இணையதளம்
வந்துள்ளது. எண்ணற்ற தகவல்கள் அனைத்தும் பொக்கிஷம் தான்
என்று சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு சிறிய பிராஜெக்ட் முதல்
பெரிய பிராஜெக்ட் வரை அனைத்தும் எங்கும் சென்று தேட வேண்டாம்
உடனடியாக கிடைக்கிறது.

தேடுதலில் கூகிள் ஒரு பெரிய கடல் தான். ஆனால் சில நேரங்களில்
இந்த கடலில் சென்று முத்தெடுக்க கூட நம்மால் முடியவில்லை.
தகவல் கிடைப்பதற்கு முன் சில குப்பைகள் தான் முதலில்
தோன்றுகிறது.பொறியியல் துறையில் படிக்கும் மாணவர்கள் சில
ஆராய்ச்சி பிராஜெக்ட் செய்ய அடிக்கடி கூகுளில் சென்று தேடிக்
கொண்டிருக்கின்றனர். பல நேரங்களில் நாம் தேடுவதை கூகுள்
கொடுக்கிறது சில நேரங்களில் நாம் தேடும் பிராஜெக்ட் பற்றிய எந்த
தகவலும் கிடைப்பதில்லை அல்லது பொருந்தாத தகவல் கிடைக்கிறது
இப்படி நாம் தேடும் தகவல் கூகுளில் இல்லாதபட்சத்தில் இந்த
இணையதளத்திற்கு சென்று தேடலாம். உடனடியாக ஆராய்ச்சி
பிராஜெக்ட் மற்றும் தகவல்களை மிகச்சரியாக கொடுக்கிறது.
விவசாயத்திலிருந்து பொறியியல் துறையில் படிக்கும் மாணவர்கள்
வரை அனைவருக்கும் தேவையான பிராஜெக்ட் தனித்தனி வகையாக
பிரித்து வைக்கப்பட்டுள்ளது.சில நாட்களுக்கு முன் நண்பர்கள் பல
பேர் ஆராய்ச்சி செய்யவதாகவும் போதுமான அளவு தகவல்களை
பெற ஏதாவது இணையதளம் உள்ளதா என்று கேட்டிருந்தீர்கள்
கண்டிப்பாக இந்த இணையதளம் உங்களுக்கு உதவும்.
இணையதள முகவரி :  http://www.intute.ac.uk

Post a Comment

 
Top