0
எக்சல் ( Excel) -ல் அடிக்கடி நமக்கு பல சந்தேகங்கள் எழுவதுண்டு,
சாதாரண பார்முலாவில் இருந்து அத்தனையையும் எக்ஸ்பர்டிடம்
கேட்கலாம் உடனடியாக பதில் கிடைக்கும் எப்படி என்பதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.
படம் 1
எக்சல் சிறிய புரோகிரமருக்கு மட்டுமல்ல பெரிய புரோகிராமருக்கும்
அதை விட புரோகிராம் என்றால் என்னவென்று தெரியாதவர்களும்
எளிதாக பயன்படுத்தும்படி அமைந்து இருக்கிறது இருந்தும் பல
நேரங்களில் எதற்கு எந்த பார்முலா என்று தெரிவதில்லை இதைப்
போல் நமக்கு எழும் பல கேள்விகளுக்கும் உடனடியாக விடையளிக்க
எக்ஸ்பட் ஒருவர் இருக்கிறார்.
படம் 2
இணையதள முகவரி : http://www.excel-formulas.com
இந்தத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி நமக்கு எழும்
கேள்விகளை கட்டத்திற்குள் தட்டச்சு செய்து Get Unstack Now என்ற
பொத்தானை அழுதவேண்டும் அடுத்து வரும் திரையில் Expert Type
பதில் அளிப்பவர்களில் ஒருவரை எந்தத் துறை சார்ந்தவர் என்பதை
தேர்ந்தெடுக்க வேண்டும் (படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது).
படம் 3
தேர்ந்தெடுத்ததை சொடுக்கியதும் Step 3 வந்துவிடும் இதில் நாம்
நம்முடைய இமெயில் முகவரியை கொடுத்து Submit Question
என்ற பொத்தானை சொடுக்கவும் சில நிமிடங்களில் நம் இமெயிலுக்கு
பதில் வந்துவிடும். (படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது) .
Accounting / Finance , Human Resource / Payroll, Inventory ,
Business / Sales , Loans / Wortgages , General Expert
போன்ற அத்தனை துறையில் இருப்பவர்களுக்கும் எக்சலில்
இருக்கும் அத்தனை சந்தேகங்களையும் இங்கு இலவசமாக
கேட்கலாம் கண்டிப்பாக எக்சல் பற்றிய மேலும் அறிந்து கொள்ள
விரும்பும் நபர்களுக்கு இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.

Post a Comment

 
Top