0
நம் இணையதளத்தில் யாகூ பஸ் பொத்தான் வைப்பதன் மூலம்
யாகூ பயனாளர்கள் அதிகபேரை  நம் தளம் சென்றடைய உதவும்
இதைப்பற்றி தான் இந்த பதிவு.
படம் 1
கூகுள் பஸ் பிரபலமான அளவிற்க்கு யாகூ பஸ் பிரபலம் ஆகவில்லை
ஆனால் தற்போது அனைத்து தரப்பு மக்களும் யாகூ பஸ் பொத்தானை
தங்கள் இணையதளத்தில் வைத்து அதிக வாசகர்களை பெற்று
வருகின்றனர். பயன்பாடு எல்லாம் கூகுள் பஸ் பொத்தான் செய்யும்
அதே வேலை தான் என்றாலும் அதிகமான வாடிக்கையாளர்களை
கொண்ட யாகூவிலும் நம் தளம் அதிக வாடிக்கையாளர்களை
விரைவாக பெற்று தரும் என்பதாலும் பயன்படுத்துகின்றனர்.
யாகூ பஸ் பொத்தான் நம் பிளாக் அல்ல்து இணையதளத்தில்
எப்படி சேர்க்கலாம் என்று பார்க்கலாம்.
படம் 2
படம் 3
http://buzz.yahoo.com/buttons இந்த தளத்திற்க்கு சென்று
வலது பக்கம் உள்ள ” Sign in ” என்பதை அழுத்தி யாகூவில்
உள்ள உங்கள் கணக்கை திறந்து கொள்ளவும். அடுத்து படம் 1-ல்
காட்டியபடி வரும் பஸ் பொத்தானில் நமக்கு பிடித்த சரியன அளவுள்ள
பொத்தானை தேர்ந்தெடுத்துக் கொண்டபின் படம் 2-ல் உள்ளது
போல் பொத்தானுக்கு அருகில் இருக்கும் “Get code” என்பதை
அழுத்தவும்.இபோது படம் 3-ல் காட்டியபடி யாகூ பஸ் பொத்தான்
Code தெரியும். அந்த code -செலக்ட் செய்து பின் காப்பி செய்து
நம் தளத்தில் எந்த இடத்தில் வேண்டுமோ அந்த இடத்தில்
பேஸ்ட் செய்து கொள்ளவும். நீங்கள் இடும் ஒவ்வொரு பதிவிலும்
இந்தபொத்தானை சேர்ப்பதன் மூலம் அதிக யாகூ வாசகர்களை
நாம் பெற முடியும்.

Post a Comment

 
Top