0
நம் பிளாக்-ல் உள்ள தகவல்களை கணியில் சேமித்து வைக்கலாம்
சில நேரங்களில் நம் பிளாக் பாதிக்கப்பட்டாலோ அல்லது ஏதாவது
மாற்றம் ஏற்பட்டாலோ உடனடியாக நாம் சேமித்து வைத்திருக்கும்
(Back up) தகவல்களை கொண்டு மீண்டும் நம் பிளாக்-ஐ
புதுபிக்கலாம் எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவு.
படம் 1
படம் 2
படம் 3
http://www.blogger.com என்ற இணையதளத்திற்க்கு சென்று நம்
பிளாக் கணக்கை திறந்து கொள்ளவும் அடுத்து படம் 1-ல் காட்டப்பட்டது
போல் Settings என்பதை அழுத்தி வரும் திரை படம் 2-ல்
காட்டப்பட்டுள்ளது இதில் Basic என்பது தான் தேர்வாகி இருக்கும்
தேர்வாக வில்லை என்றால் Basic என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்
அடுத்து பட்ம் 3-ல் காட்டப்பட்டது போல் Export blog என்பதை
என்பதை அழுத்தவும்.அடுத்து வரும் திரை படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது
இதில் Download blog என்ற பொத்தானை அழுத்தி நம் பிளாக்-ஐ
(பேக்கப்) சேமித்துக் கொள்ளலாம்.
படம் 4
படம் 5
எதாவது காரணங்களுக்காவோ அல்லது யாராவது நம் பிளாக் தகவல்களை
திருடி மாற்றினாலும் நாம் எடுத்து வைத்திருக்கும் பேக்கப் வசதி மூலம்
மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர படம் 3-ல் உள்ள import blog
என்பதை அழுத்தவும் அடுத்து வரும் திரை படம் 5-ல்
காட்டப்பட்டுள்ளது இதில் இருக்கும் Choose என்ற பொத்தானை
அழுத்தி நாம் கணினியில் சேமித்து வைத்திருக்கும் (பேக்கப்)
கோப்பை தேர்வு செய்து கொள்ளவும் இனி நம் பிளாக் முன்பு
இருந்தது போல் மாறிவிடும்.

Post a Comment

 
Top