0
ஆங்கிலத்தை வளர்த்துக்கொள்ள விரும்பும் நபர்களுக்கும் , புதிய
ஆங்கில வார்த்தையைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் நபர்களும்
பயனடையும் வகையில் உதாரணத்துடன் புதிய ஆங்கில
வார்த்தையை எளிதாக கற்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

ஆங்கில மோகம் கொண்டவர்கள் மட்டுமல்ல அனைவருமே இப்போது
சரளமாக ஆங்கிலம் பேச நினைப்பவர்களும் புதிய ஆங்கில
வார்த்தைகளை கற்றுகொள்ள விரும்புகின்றனர். இதற்காக
புதிய ஆங்கில வார்த்தையை கற்றுக்கொண்டால் மட்டும்
போதுமா அதை சரியாக எங்கு பயன்படுத்த வேண்டும் என்று
உதாரணத்துடன் கூறினால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் ஆம்
நமக்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.wordspy.com
இந்ததளத்திற்கு சென்று நாம் புதிது புதிதாக பல ஆங்கில
வார்த்தைகளை கற்கலாம் ஒவ்வொரு வார்த்தைக்கும் சிறிய
விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. Search Word Spy என்ற
கட்டத்திற்குள் நாம் புதிதாக அறிய விரும்பும் வார்த்தையை
கொடுத்து தேடலாம். Alphaphetic வரிசையிலும் நாம் புதிய
வார்த்தையை தேடலாம். புதிதாக சொல்லி இருக்கும் ஆங்கில
வார்த்தையை எங்கு எப்படி பயன்படுத்துகின்றனர் என்ற கூடுதல்
தகவலும் இருக்கும். குழந்தைகளுக்கும் ஆங்கில அறிவை வளர்க்க
விரும்பும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.

Post a Comment

 
Top