0
கணனியை Format  செய்யாமல் Partition களை  உருவாக்குவது சாத்தியமா? சில சந்தர்ப்பங்களில் கணனி வன்தட்டில் மேலதிக பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எந்த முடிவை எடுப்பீர்கள்?  Format  செய்து பின்  hard disk கினை தேவையான partition களாக பிரிப்பது என்ற முடிவையே பலரும் எடுக்கின்றனர். நான் அதைபற்றி பகிர வரவில்லை.


இதற்க்கு வேறான மென்பொருட்களும் அவசியமில்லை. மேலும் அத்தியவசிய கோப்பிகள், உறைகளை வேறு இயக்கிகளுக்கு (separate drives) மாற்ற அல்லது பிரதி  செய்து (copy) கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.
கீழ் வரும் படிமுறைகளை பின்பற்றி புதிய  Partition ஒன்றை  SYSTEM DRIVE இல் உருவாக்கிக் கொள்ளலாம்.

1) முதலில் My Computer இல் Right click செய்து Manage என்பதை தெரிவு செய்யுங்கள் பின் Computer Management Window தோன்றும்.

2) அதில்  Storage  சென்று Disk management என்பதை click செய்யுங்கள்.

3) அதில் வன்தட்டு , எனைய  storage media க்களின் தகவல்கள் காண்பிக்கப்பட்டிருக்கும்.
இப்பொழுது உங்களுக்கு Partition செய்யவேண்டிய Disk Drive வினை தெரிவுசெய்யுங்கள்.